lundi 22 août 2016

ஒன்றில் நான்கு [சதுர்பங்கி]



ஒன்றில் நான்கு [சதுர்பங்கி]
ஒரு பாடலை நான்காகப் பகிர்தல்

எண்சீர் விருத்தம்!

கற்கண்டுக் காரிகையே! ஞாலம் போற்றும்
   நற்றொண்டு செய்கின்றாய்! காலம் போற்றும்!
சொற்கொண்டு பாடுகிறேன்! கோலப் பெண்ணே!
   விற்கொண்ட விழியழகே! வேலன் காப்பான்!
பற்றுண்டு! பணிவுண்டு! நெஞ்சக் கூட்டில்!
   பொற்புண்டு! புகழுண்டு! கொஞ்சும் பாட்டில்!
கற்புண்டு! கனிவுண்டு! விஞ்சும் இன்பம்!
   வற்புண்டு காதலிலே! தஞ்சம் நானே!

1. வஞ்சித்துறை

கற்கண்டுக் காரிகையே!
நற்றொண்டு செய்கின்றாய்!
சொற்கொண்டு பாடுகிறேன்!
விற்கொண்ட விழியழகே!

2. வஞ்சித்துறை

ஞாலம் போற்றும்
காலம் போற்றும்
கோலப் பெண்ணே!
வேலன் காப்பான்!

3. வஞ்சித்துறை

பற்றுண்டு! பணிவுண்டு!
பொற்புண்டு! புகழுண்டு!
கற்புண்டு! கனிவுண்டு!
வற்புண்டு காதலிலே!

4. வஞ்சித்துறை

நெஞ்சக் கூட்டில்!
கொஞ்சும் பாட்டில்!
விஞ்சும் இன்பம்!
தஞ்சம் நானே!

இலகக்கணக் குறிப்பு:
ஒரு செய்யுள் ஒரு பொருள் பயப்பதன்றி, அதுவே நான்கு செய்யுளாய்ப் பிரிந்து வெவ்வேறு பொருள் தருமாறு வர வேண்டும்.

பாட்டரசர் கி. பாரதிதாசன்
22.08.2016

2 commentaires:

  1. பாட்டரசர் என்ற பட்டத்திற்கு இப் பாடல் ஓர் எடுத்துக் காட்டு!நலமா!

    RépondreSupprimer
  2. வணக்கம்
    ஐயா

    தங்களை விஞ்சியது ஏது அற்புதமான விளக்கம் கொடுத்து அழகாக பரித்து எழுதியுள்ளீர்கள் படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் ஐயா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer